Thursday, June 13, 2013

puduvai gnanam

Read More...

Sunday, July 19, 2009

SIVA POOKA SAARAM

சிவபோக சாரம்



சிவபோக சாரம்
திரு குருஞான சம்பந்தர் அருளியது.

சித்தி தரு நாதன் தென் கமலை வாழ்நாதன்
பக்தி தரு நாதன் பர நாதன் _ முத்திப்
பெருநாதன் ஞானப் பிரகாசன் உண்மை
தருநாதன் நம் குருநாதன்.

அருவும் உருவும் அருவுருவும் அல்லா
ஒருவன் உயிருக்கு உயிராய் ஓங்கித் - திருவார்
கமலை வரு ஞானப்பிர்காசன் என வந்தே
அமல பதம் தந்து எனை ண்டான்.

ஆர் அறிவார் நீதிவழி? ஆர் அறிவார் சித்திமுத்தி
ஆர் அறிவார் நல்தவங்கள் அன்பு அனைத்தும் _ பாரெவர்க்கும்
கத்தன் கமலையில் வாழ் ஞானப்பிரகாசன் எனும்
அத்தன் என் போல் வந்திலன் ஆனால்.

அரி அயற்கு முன்நான் அடிமுடியும் காணாப்
பெரியவனே வந்து பிறந்து _ துரியம்
பெருக்கின்றான் ஞானப்பிரகாசன் ஆகி
இருக்கின்றான் ஆரூரில் இன்று.

கண்டேன் இப்பாசம் கழித்தேன் அமுதை முகந்து
உண்டேன் சுகானந்தத்து உள்ளிருந்தேன் _ வண்டு இமிர்காத்
தேனைப் பொழி கமலைச் செங்கமலப் பொற்பாத
ஞானப்பிரகாசனையே நான்.

உள்ளிருந்தே என்றும் உணர்த்துகினும் கண்டிலர் என்று
உள்ளும் புறமும் ஆவோம் என்று _ மெள்ள
நரர் உருவாய் ஆரூரில் வந்தான் நமை ஆண்டு
அருள் புரி ஞானப்பிரகாசன்.

இருள் உதயம் நீக்கும் இரவியைப் போல் என்னுள்
அருள் உதயம் நன்றாய் அருளி _ மருள் உதயம்
மாற்றியவன் ஆரூரன் மாமறையும் ஆகமும்
சாற்றிய ஞானப்பிரகாசன்.

ஒழியாத பேரின்பத்து உள்ளாய் உலகில்
விழியாது இருந்து விடவே _ அழியாத
பூரணா! செங்கமலப் பொற்பாதா! தென்கமலை
ஆரணா நாயேற்கு அருள்.

தேடும் திரவியமும் சிற்றறிவும் பற்றுதலும்
கூடும் பொய் என்று அருளில் கூட்டினான் _ நாடரிய
ஞானப்பிரகாசன் உயர் நற்கமலை மாநகர் வாழ்
வானப்பிறை அணிந்த மன்.

காண்பதும் பொய் கேட்பதும் பொய் காரியம் போலே இதமாய்ப்
பூண்பதும் பொய் எவ்விடத்தும் போகமும் பொய் _ மாண்பாகத் தோற்றி
இன்பவெள்ளமாய்த் துள்ளி என்னுள் சம்பந்தன்
வீற்றிருப்பது ஒன்றுமே மெய்.

ஒருமையுடன் ஈசன் அருள் ஓங்கி என்றும் தூங்கல்
அருமை அருமை அருமை _ பெருமை இடும்
பாங்காரம் கோபம் அபிமானம் ஆசை வினை
நீங்காதபோது தானே.

தன்பெருமை எண்ணாமை தற்போதமே இறத்தல்
மின்பெருமையாம் சகத்தை வேண்டாமை _ தன்பால்
உடலைத் தினம் பழித்தல் ஓங்கு சிவத்து ஒன்றல்
நடலைப் பிறப்பு ஒழியும் நாள்.

உரை இறந்தால் உண்ணும் உணர்வு இறந்தால் மாயைத்
திரை இறந்தால் காண்கின்ற தேவை _ வரை பெருக
வாசிப்பது நாவால் வாழ்த்துவது நாடகமாய்ப்
பூசிப்பதும் சுத்தப் பொய்.

பரம ரகசியத்தைப் பாழான வாயால்
இரவு பகல் எந்நேரம் இன்றி _ குரல் நெரியக்
கூப்பிட்டும் காணுமோ கோழை மடநெஞ்சே! மால்
பூப்பிட்டும் காணாப்பொருள்.

ஒருகோடி ஆகமங்கள் எல்லாம் உணர்ந்தும்
பெருகு தவம் சித்தி எலாம் பெற்றும் _ குரு அருளால்
வைத்தபடி இருக்க மாட்டாத மாந்தர்க்குச்
சித்த சலனமாம் தினம்.

அன்பு மிக உண்டாய் அதிலே விவேகம் உண்டாய்த்
துன்ப வினையைத் துடைப்பது உண்டாய் _ இன்பம்
தரும் பூரணத்துக்கே தாகம் உண்டாய் ஓடி
வரும் காரணர்க்கு உண்மை வை.

உருவை அருவை ஒளியை வெளியை
இருளைச் சிவம் என்று இராதே _ மருளைப்
பிறிந்து அறிவில் கண்டதனைப் பின்னம் அற எங்கும்
செறிந்த பொருள் தானே சிவம்.

அகம் ஆதி கண்ட அறிவாகி எங்கும்
சுகம் ஆகி இன்ப சுகமாய்ச் _ சுகாதீதத்து
ஆனந்த வெள்ளம் அதுவாய்ச் சுகத்தை அகன்றான்
அந்தம் ஆதி இலாதான்.

இந்தனத்தில் அங்கி எரியுறுநீர் தேன் இரதம்
கந்தம்மலர்ப்போது வான்கால் ஒளிகண் _ சந்ததமும்
அத்துவிதம் ஆவதுபோல் ஆன்மாவும் ஈசனுமாய்
முத்தியிலே நிற்கும் முறை.

ஆறாறு தத்துவமும் ணவமும் நீங்கி உயிர்
வேறாக நின்ற இடம் சொல்லின் _ மாறா
இருள் ஆய பாவனை அற்று எங்குமாய் நின்ற
பொருளே காண் நீயே புணர்.

நனவு ஆதி அந்தத்தில் நாடு சுகம் தன்னைக்
கனவு ஆதி அந்தத்தில் கண்டு _ நனவுதி
தோற்றிடும்போது அந்தச் சுகரூபம் கண்டவர்கள்
மாற்றிடுவர் என்றும் மலம்.

தத்துவங்கள் எண்ணித் தலையடித்துக் கொள்ளாதே
தத்துவங்கள் எது என்னின் சாற்றக்கேள் _ மெத்தும்
சுகாரம்பமாம் சிவத்தில் தோயாத மாயா
விகாரங்கள் தத்துவம் ஆமே.

ஆறுஆறு தத்துவமும் ஆணவமும் வல்வினையும்
நீறுஆக முக்திநிலை நிற்போர்க்குப் _ பேறு ஆகப்
பார்விரித்த நூல் எல்லாம் பார்த்து அறியின் சித்தியிலே
ஓர்விருத்தப் பாதி போதும்.

பாவி மனம் போகாப் பரத்து அடைய நாளும்
இரவு பகல் அற்ற இடத்தே _ திரமாக
நில் என்றான் கண்ட எல்லாம் நேதி பண்ணி மும்மலமும்
கொல் என்றான் ஞான குரு.

காயம் கரணம் முதல் நான்கிற்கும் காரணம்தான்
ஆய இருள் மாயை அது என்றால் _ தூய பொருள்
போதனே!செங்கமலப் பொற்பாதனே எனை நீ
எது என்று சொல்லாய் இனி.

என்னை அறிவு என்றான் என் அறிவில் ஆனந்தம்
தன்னைச்சிவம் என்றான் சந்ததமும் _ என்னை உன்னிப்
பாரா மறைத்ததுவே பாசம் என்றான் இம்மூன்றும்
ஆராய்ந்தவர் மூத்தராம்.

எங்கும் இருக்கும் அறிவுநீ ஏகமாய்
அங்கங்கு உணர்த்தும் அறிவு நாம் _ பொங்கு
மலம் மறைத்தல் மாயை மயக்கல் விகாரப்
பலம் அனைத்தும் கன்ம மலம் பார்.

செங்கமலப் பொற்பாதன் சீர்பாத வல்லவங்கள்
நம் கமலை வாழ்கிளியே! நாடிக்கேள் _ சங்கை இலாத்
தத்துவத்தைக் காட்டியதின் தத்துவத்தைக் காட்டி அருள்
அருள் தத்துவத்தைக் காட்டியது தான்.

தேகசெறி கமலைச் செங்கமலப் பொற்பாதன்
பேசுதமிழ் ஞானப் பிரகாசன் _ பாச வினை
வாட்டினான் மீட்டுநான் வாராவகை அருளைக்
காட்டினான் கூட்டினான் காண்.

நான் இங்காய் நீஅங்காய் நாட்டமற வைத்ததன் பின்
நான் எங்கே? நீஎங்கே? நாதனே! - வான் எங்கும்
ஒன்றாகி நின்ற உணர்வுநீ உன் அறிவில்
நன்றாகத் தோன்றுசுகம் நாம்.

அலைவு அற்று இருந்த அறிவுநீ ஆங்கே
நிலை பெற்று இருந்த சுகஞேயம் _ மலைவு அற்று
இருந்தது கண்டாயே இருந்தபடி அத்தோடு
இருந்துவிடு எப்போதும் இனி.

அகத்தை இழந்து அருளாய் அவ்விடத்தே தோன்றும்
சுகத்தில் அழுந்திவிடச் சொன்னான் _ மகத்தான
சிற்பரன் ஆரூர்தனில் வாழ் செங்கமலப் பொற்பாத
தற்பர ஞானப்பிரகாசன்.

கிட்டாத ஈசன் உனைக்கிட்டி அருள்புரிந்த
நிட்டானுபூதி நிலையிலே - முட்டாது
இருவன்னி சேர்ந்து மாற்று ஏறிய பொன் போலே
வரும் இன்ப பூரணம் ஆவை.

அநாதி சுகரூபி அரன் அடிக்கீழ் என்றும்
அநாதி சுகரூபி ஆன்மா - அநாதி
இருந்த மலம் போக்கி இறை அருளினாலே
இருந்தபடியே கண்டு இரு.

இற்றைவரைக் காரணத்தோடு இணங்கினையே
இற்றைவரைச் சென்மம் எடுத்தனையே _ இற்றைவரைத்
துன்ப வெள்ளத்து உள்ளே துளைந்தனையே ஈதுஅற நல்
இன்ப வெள்ளத்து உள்ளே இரு.

தேகாதி நான் அல்ல என்று அறிந்தால் சித்தமயல்
போகாதது என்னையோ? புண்ணியா _ தேகாதி
தன் அளவே அம்மயக்கம் சத்தியமாய் எப்பொழுதும்
உன் அளவே இல்லை உணர்.

ஆறு ஆறு தத்துவம் அன்று என்று அறிந்தனையே
ஆறும் ஆறும் கண்டு அறிவன் ஆயினையே _ மாறாமல்
உன் அறிவில் ஆனந்தத்து ஓங்கினையே ஓராமல்
நின்னறிவை விட்டு அதுவாய் நில்.

மாதா பிதாச் சுற்றம் என்று மயங்கினையே
நீதான் தனுவாகி நின்றனையே _ ஈது எல்லாம்
பொய் என்று அறிந்தனையே பூரண ஆனந்த வெள்ளம்
மெய் என்று அறிந்தனையே மெய்.

மனையில் வரு போகத்தின் மாதர் மக்கள் பாச
வினையில் அழுந்தி விடாதே - உனை இழந்து
காணாமல் கண்டானைக் காட்சியறக் கலந்து
பூணாமல் எப்பொழுதும் பூண்.

கத்தவத்தை நாடீடும் சுத்த இராப்பகலா
மெத்தவத்தை நாடி விடுவையேல் _ கத்தவத்தை
தானாய் இரண்டும் தவிர்த்த சிவானந்த
வான் ஆவை நீயே மதி.

கத்தநிலம் உந்தனுக்கு சொல்லக்கேள் தொல்லைவினைத்
தத்துவங்கள் ஆறுஆறும் தாம் பெருகக் _ கத்திடுவர்
எல்லாம் இழந்த இடமே அதுவாக
நில்லாய் அதுவே நிலை.




நெருப்பு என்றால் வாய்கடுமோ?நெய்பால் கட்டித்தேன்
கருப்பு என்றால் தித்தியா காண்நீ _ விருப்பமுடன்
நீபிரமம் என்றக்கால் நீபிரமம் ஆயினையோ
நீபிரமம் சற்குரு வானில்.

ஆர்க்கும் தெரியாத ஆனந்த இன்ப வெள்ளம்
மேற்கொண்டு விடுகின்றது இல்லை _ யார்க்கும்
தெரியாப் பரப்பிரமம் சேர்த்தாய் உனக்குச்
சரியார் ? சிதம்பர நாதா !

உள்ளம் கரைய உடல் கரைய ஆனந்த
வெள்ளம் கரை புரண்டு மேலாக _ கள்ளமலம்
பொய் ஆக என்னுள் புகுந்தவாறு என்கொலோ ?
ஐயா! தியாக வினோதா !

ஏதேது செய்தாலும் ஏதேது சொன்னாலும்
ஏதேது சிந்தித்து இருந்தாலும் _ மாதேவா !
நின் செயலே என்று நினது அருளாலே உணரின்
என் செயலே காண்கிலனே.

மாயை மலம் எங்கே மறைந்ததோ !மாயைதனில்
ஆயசகம் எங்கே அழிந்ததோ ! காயமதில்
தங்கும் புருடன் எங்கோ ! சச்சிதானந்த வெள்ளம்
எங்கும் மிகக்கோத்ததே.

நானும் சுகவடிவாய் நண்ணினேன் நின் அருளால்
வானும் சுகவடிவாய் மன்னிற்றே _ வானும்
சுகரூபமன்று மணம் தோற்ற நிலம்போல் உன்
அகரூப மட்டே அது.

ஈசன் அடியில் இருக்கையிலே எங்கெங்கும்
ஈசன் அடிதேடி இளைத்தேனே_ பேசரிய
பொற்பதந்தன் செங்கமலப் பொற்பாதன் தன்னுடைய
நற்பதத்தைக் காணாமுன் நான்.

நற்பதம் சேர் ஆரூரின் ஞானப்பிரகாசன் எந்தை
தற்பரன் ஓர் ஞானவான் தந்தானே _ சொற்பனத்தும்
காரார் மறலி அயன் கண்ணனுக்கும் அஞ்சேனை
யாராலும் என் செய்யலாம் ?

வெறும் பாழில் பேரின்ப வெட்டவெளி தன்னில்
குறும்பானார் காணாக்குடிலின் _ உறும்பாசம்
ஒட்டி எனை வைத்தனனே உற்ற பிரபஞ்சம் எலாம்
ஆட்டிய ஞானப்பிரகாசன்.

என்றும் சிவத்தோடு இணைபிரியாதே அறிவாய்
நின்றபடி தன்னை நிகழ்த்தினான் _ மன்றில்
நடம் ஆடும் ஆரூரன் ஞானப்பிரகாசன்
திடமாக என் உள்ளத்தில்.

நாதனார் தென்கமலை நாயனார் எவ்வுயிர்க்கும்
போதனார் செங்கமலப் பொற்பாதர் _ பேதம் அற
ஒன்று இரண்டு தானறவே உண்மையிலே கூட்டி எனை
இன்றறவே வைத்து விட்டாரே.

நன்னெஞ்சே நீ கேட்ட நமை எலாம் சொல்லுதற்குக்
கல்நெஞ்ச மால் அயனும் காணாதோன் _ வன்னெஞ்சர்
இன்னகுறை உண்டு எண்ணா ஈசன் எதிர் வந்தான்
என்ன குறை? சொல்லாய் இனி.

இட்டசனம் எங்கே இதம் அகிதம் தான் எங்கே
துட்டசனம் எங்கே ? தொழில் எங்கே ? - சிட்டருடன்
கூடி இருந்தது எங்கே ? குன்றாச் சிவானந்தம்
நாடி அதுவாய் இருந்த நாள்.

வாக்கு மனம் காயத்தால் வந்த பொருள் அத்தனையும்
வாக்கு மனம் காயமுடன் மாயுமே _ வாக்கு மனம்
காயம் உடன் இழந்து காண் ஞாதிரு ஞான
ஞேயம் இழந்த நிலை.

புசிப்போம் சிவபோகம் பூரணமாய் எங்கும்
வசிப்போம் உலகில் வசியோம் _ முசிப்பின்றி
வாழ்வோம் சிவத்தை உணர் மாதவர்தம் பொன்னடிக்கீழ்த்
தாழ்வோம் எமக்கு ஆர்சரி ?

அறிவுநீ என்ன அறிந்து மாயைச்
செறிவுநான் என்றென்று சேர்ந்தால் _ அறிவு
தெரிந்திடுமோ? இன்பசுகம் சேர்ந்திடுமோ? நின்னைப்
பிரிந்திடுமோ? சென்மப்பிணி.

அரணங்கள் தாம் எரித்த அத்தரே என்னுள்
கரணங்கள் ஒட்டும் வகை காட்டீர் _ கரணங்கள்
நீ அதுவாய் நில்லாமல் நின் அறிவைக் கண்டருளில்
போயதுவாய் நின்றுவிடப்போம்.

தான் அல்லாது அத்தனையும் தான் என்று உழலாமல்
தான் எல்லாமாயதனுள் தாக்காமல் _ தான் எல்லாம்
ஆனோம் எனும் போதத் தாக்காமல் ஈசன் இடத்து
ஆனோனே ஆயினவாம்.



தேகம் நாம் என்று என்று செப்புவீர் ஈதில்வரும்
போகம் நாம் என்று புலம்புவீர் _ நோக
வருந்துவீர் தீவினையின் மாறாத இன்பம்
பொருந்துவீர் எப்படி நீர் போய்?

தன்னை இழந்திடத்தே தானே சுக வடிவாய்
இன்னபடி என்று அரியா எங்கோனுள் _ பின்னமற
நின்ற நிலை தானும் தெரியாதே நின்றவர்கட்கு
அன்றோ பிறப்பு அறுக்கலாம்.

உன்னாதே பற்று உரையாதே ஒன்றியதில்
நின் நாமம் இல்லை நிகழாதே _ பன்னாள்
பரை இழந்து நிற்கும் பயன் அணைந்தார் நெஞ்சில்
திரை இழந்து நிற்கும் சிவம்.

அருள் அறிந்து தானாம் அறிவு அறிந்தே ஆங்கு உள்
பொருள் அறிந்து தான் அடங்கிப் போத _ இருள் அகல
விம்மாது இருந்து விகற்பமற ஒன்றாகிச்
சும்மா இருக்கை சுகம்.

செறியும் தனுஆதி சேர்ந்துஅறிந்து நின்ற
அறிவை அறிவால் அறிந்தே _ அறிவிழந்து
நின்றால் சுகானந்த நீடு நிலை வேறு
சென்றால் சுகம் கிடையாதே.

தத்துவத்தை விட்டு அருளில்தான் கலந்து தன் இழப்பில்
மெத்தும் சுகத்தில் மிக அழுந்திச் _ சுத்தமாய்
ஒன்றாகி நின்ற உணர்வும் ஒழிந்தக்கால்
அன்றோ சிவ போகமாம்.

கட்டறிவு கெட்ட சுகாதீத உண்மையிலே
விட்டு அகலாது என்றும் விரவுவோர் _ இட்டமுடன்
யோக சமாதிகளும் உட்புறம்பாம் பூசைகளும்
ஆக நினையார் அவர்.

நின் அறிவில் யான் ஒளித்து நீஆகி நின்றது போல்
என் அறிவில் நீஒளித்தே யான் ஆகி _ எந்நாளும்
நிற்க வல்லமையாகில் நின் சனனம் போக்குதற்குக்
கற்கவல்லது ஏதும் இல்லை காண்.

இன்ப சுகத்துள்ளே இருக்கலாம் எப்போதும்
துன்பவினை உன்னைத் தொடராது _ வன்பா
மருள் தேகமாய் அடங்கி மாயாமல் நெஞ்சே
அருள் தேகமாய் அடங்குவாய்.

தேகம் மறந்து திருவருளாய் நின்று சிவ
போகம் விளையப் புணர் நெஞ்சே _ நோக
வருந்தாமல் தீவினையில் வாடாமல் துன்பம்
அருந்தாமல் நீ பிறவாமல்.

பூதாதி பாசம் அன்றோ பூரணா னந்தமன்றோ
பேதமற நம்முள் பிரான் அன்றோ _ வாதனைகள்
விட்டால் சுகமன்றோ என்று உணர்வில் வேண்டுவதும்
கெட்டால் பிறப்பு கெடும்.

அழுந்தாதே பாசத்து அனுதினமும் ஐயோ
விழுந்தால் எழுந்திருக்க வேண்டும் _ செழும்பாகை
மீறித் தரும் இரத வீட்டுஇன்ப மாமலை மேல்
ஏறித் திரும்பலாமே.

என்றும் சனனத்து இடர்க்கடலிலே மூழ்கிப்
பொன்று மனமே!உனக்கு ஓர் புத்தி கேள் _ நன்று
கனிச்சங்கம் சேராமல் தற்பரனைச் சேரில்
இனிச்சங்கம் சேராதிரு.

அவரவர்க்கு உள்ளபடி ஈசன் அருளாலே
அவரவரைக் கொண்டு இயற்றுமானால்_ அவரவரை
நல்லார் பொல்லார் என்று நாடுவது என் நெஞ்சமே
எல்லாம் சிவன் செயல் என்று எண்.

எங்கே நடத்துமோ? எங்கே கிடத்துமோ?
எங்கே இருத்துமோ என்றறியேன் - கங்கைமதி
சூடினான் தில்லையிலே தொம் தொம்மெனநின்று நடம்
ஆடினான் எங்கோன் அருள்.

போகம் புவனம் பொருந்தும் இடம் எங்கெங்கும்
தேகம் கரணம் திரியுமே _ யாகில் அது
தன்னை நீஎன்று தவியாதே நெஞ்சமே
நின்னையே கண்டு அருளில் நில்.

ஏதேது செய்திடினும் ஏதேது பேசிடினும்
ஏதேது சிந்தித்து இருந்திடினும் _ மாதேவன்
காட்டிடுவதான அருள் கண்ணைவிட்டு நீங்காது
நாட்டம் அதுவாய் நட.

எடுத்த உடற்கு ஏய்ந்த கன்மம் எப்போதும் ஊட்டும்
விடுத்துவிட்டோம் என்பர் விழலர் _ விடுத்தது
அதுவன்றே ஐந்து மலம் ஆறும் ஆறும் நீத்த
இதுவன்றோ யாம் துறவு என்போம்.

எவ்வுயிரும் காக்க ஓர் ஈசன் உண்டோ இல்லையோ
அவ்வுயிரில் நாம் ஒருவர் அல்லவோ _வவ்விப்
பொருகுவது நெஞ்சே புழுங்குவதும் வேண்டா
வருகுவதும் தானே வரும்.

முப்பதும் சென்றால் விடியும் முப்பதும் சென்றால் இருளும்
அப்படியே ஏதும் அறிநெஞ்சே _ எப்பொழுதும்
ஆம்காலம் எவ்வினையும் ஆகும் அது தொலைந்து
போம்காலம் எவ்வினையும் போம்.

ஆவ லுற்றிடும் சகலத்து ஆவதும் ஆங்கவரே
கேவலத்தில் மூழ்கிக் கிடப்பதுவும் _ நா அரற்றல்
இல்லாத கத்தத்து இருப்பதுவும் இம்மூன்றும்
இல்லான் செயல் என்று இரு.

பாசம் சடம் உயிரோ தானாகப் பற்றறியாது
ஈசன் இரண்டும் இணைத்து ஆட்டிப் _ பூசல் என்றும்
செய்பவனே தானே திரும்பி அருள் செய்யாமல்
உய்பவர்கள் உண்டோ உரை.

முற்றின்பாம் அறிவில் மூழ்குவதும் மோகம் மிகு
சிற்றின்பமாம் அருளில் சேர்குவதும் - உற்று இங்கு
அறிந்தால் என் நெஞ்சே!அகிலாண்டம் எங்கும்
செறிந்தான் செயலே தெளி.

என்னிடத்தில் நின் செயலே இல்லையென்றால் யாது உறினும்
நின்னிடத்தில் யான் வேண்டல் நிச்சயமே _ என்னிடத்தில்
இன்மை உயிர்க்கு உயிர்நீ இன்மை இருந்து இயற்றின்
நன்மை தீமைக்கு எதுவோ நான்.

நாம் பெரியம் என்னும் அதை நாடாது அடக்குமவர்
தாம் பெரியர் என்று மறை சாற்றியிடும் _ நாம் பெரியர்
என்பார் சிறியர் இவரலாது இவ்வுலகில்
துன்பு ஆர் சுமப்பார்கள் சொல்.

கட்டமாம் காயம் கலை அனைத்தும் கற்றாலும்
அட்டமாசித்தி அடைந்தாலும் _ இட்டம்
பரம சுகமே பதியாத போது
திரம சுகமே தெளி.

மனம் வாக்குக் காயம் உயிர் மன்னி அசைப்பானும்
அனம் ஆதிபோகம் அளிப்பானும் _ நனவு ஆதி
கூட்டி விடுவானும் முக்தி கூட்டிடுவானும் பிறப்பில்
ஆட்டிவிடுவானும் அரன்.

முன்னை வினைக்கு ஈடா முதல்வன் அருள் நமைக்கொண்டு
என்ன வினை செய்ய செய்ய இயற்றுமோ _ இன்னவினை
செய்வோம் தவிர்வோம் திரிவோம் இருப்போம் இங்கு
உய்வோம் எனும் வகை ஏது.

ஊட்டும் வினை இருந்தால் உன்ஆணை உன்பதத்தைப்
பூட்டிப் பிடித்துப் புசிப்பிக்கும் _கேட்டுத்
திரியாதே வந்து தில்லைத் தெய்வமே என்றென்று
எரியாத நெஞ்சே இரு.

என்னது அன்று நின் செயலே என்று அறிந்தால் யான் விரும்பி
என்ன என்று வாய் திறப்பேன் ஈசனே _ இன்னமின்னம்
எப்படியோ நாயேனை ஈடேற்ற வேண்டும் உனக்கு
அப்படியே செய்து அருளுவாய். 89

வன்மைபுரி காய மரப்பாவை தன்னை அரன்
கன்மமெனும் சூத்திரத்தால் கட்டியே _ நன்மைதின்மை
ஆட்டுவது நாடாது அறிவிலார் தம்செயலாய்
நாட்டுதல் போல் உண்டோ நகை.

ஆறுஆறு தத்துவமும் ஆணவமும் நீங்கி உயிர்
பேறாக ஆனந்தம் பெற்றாலும் _ வேறாகப்
பார்த்திருப்பது அன்றியே பாழான கன்மத்தை
நீத்திருக்கலாமோ நிலத்து.

ஆன சுக துக்கத்து அழுந்துகினும் ஞானிகள் தாம்
யான் எனது எண்ணி இயைந்திடினும் _ தான் அதற்கு
வேறு என்றுஅருளால் விரளமாய்க் காணில் என்றும்
ஏறுமோ கன்மம் இலை.

சத்துருவும் மித்துருவும் தாரணியில் வேறு இல்லை
சத்துருவும் மித்துருவும் தன் நெஞ்சே _ பெத்தமலம்
வீட்டும்படிக்கு வினைக்கு ஈடு உனைத்தனுவோடு
ஆட்டும் சிவன் என்று அறி.

இன்னவினை இன்னதலத்து இன்னபொழுது இன்னபடி
இன்னதனால் எய்தும் என அறிந்தே _ அன்ன வினை
அன்னதலத்து அன்னபொழுது அன்னபடி அன்னதனால்
பின்னமறக் கூட்டும் பிரான்.

அன்றே அநாதி அமைத்தபடி அல்லாது ஒன்று
இன்றே புதிதாய் இயையுமோ _ என்றும்
சலியாது இயற்றுவான் தன்னையே நோக்கி
மெலியாது இருந்து விடு.

ஆர்பெரியர் ஆர்சிறியர் ஆர்உறவர் ஆர்பகைஞர்
சீர் பெரியர் ஆனந்த சிற்சொரூபர் _ பேர் பெரியர்
எங்கெங்கும் தாமாய் இருந்து சடசித்து அனைத்தும்
அங்கு அங்கு இயற்றுவதனால்.

நன் கருத்தே தென்கமலை ஞானப்பிரகாசனே
என் கருத்தே உன் கருத்து என்று எண்ணாமல் _ உன்கருத்தே
என்கருத்து என்று எண்ணியே யான் பட்ட துன்பம் எலாம்
உன்கருத்தே தீர அறியும்.

அமைத்த வினைக்கு ஈடா அநுதினமும் செய்வது
இமைப் பொழுதும் வீண் செயல் ஒன்று இல்லை_ உமைக்கு உரியான்
எல்லாம் அறிந்து எங்கு இயற்றுவதும் தன் அடிமை
வல்லர் தமக்கு உணர்த்துவான்.

கள்ள அரனே கருணையுடன் என் அறிவில்
உள்ள சுகம் தந்துவிட ஒன்னாதோ _ மெள்ள
வருத்துவதும் தீவினையில் வாட்டுவதும் ஞானம்
பொருத்துவதும் ஏன் தான் புகல்.

கேளாது எனை மலத்தில் கிட்டி எடுத்து ஆளாக்கி
மீளாது அளித்த பரவீட்டில் எனை _ ஆள
உனக்குப் பொறியோ உனைத் தொடர்ந்தாளென்ன
எனக்குப் பொறியோ இனி.

சும்மா தனு வருமோ சும்மா பிணிவருமோ
சும்மா வருமோ சுகதுக்கம் _ நம்மால் முன்
செய்த வினைக்கு ஈடாச் சிவனருள் செய்விப்பது என்றால்
எய்தவனை நாடி இரு.

பொல்லாத தீவினையில் போகார்கள் போனாலும்
எல்லாம் சிவன் செயலே என்று இருப்பர்_ நல்லார்கள்
நற்றும் கமலையில் வாழ் ஞானப்பிரகாசன் அருள்
சற்றும் பிரியாதவர்.

கூட்டுவதும் கூட்டிப் பிரிப்பதுவும் ஒன்றொன்றை
ஆட்டுவதும் ஆட்டி அடக்குவதும் _ காட்டுவதும்
காட்டி மறைப்பதுவும் கண்ணுதலோன் முன் அமைத்த
ஏட்டின்படி என்று இரு.

உள்ளதுதான் போமோ மற்று இல்லாதது வருமோ
பள்ளமே வெள்ளம் பரவாதோ _ கள்ளமாய்ப்
பித்துப்போலே பிதற்றும் பேதை மட நெஞ்சமே
செத்துப் போனானோ சிவன்.

ஈசன் பலகீனன் என்றக்கால் ஆலயத்தின்
மோசம் வந்ததென்று மொழியலாம் _ ஈசனே
ஆக்குவதும் ஆக்கி அழிப்பதுவும் தான் ஆனால்
நோக்குவது என்? யாம் பிறரை நொந்து.

தேசம் சிவாலயங்கள் சேரவலைய ஒரு
மோசம் வந்தது. ஐயோ முதல்வனே! _ தேசத்து
மண்ணை வெறுப்பேனோ வருவினையை ஊட்டுவிக்கும்
உன்னை வெறுப்பேனோ உரை.

துரத்தி உன்னை ஆசை தொடராமல் என்றும்
விரக்தியினால் ஆங்கவற்றை விட்டுப் _ பரத்தில் அன்பு
செய்யடா செய்யடா சேரப் பிரபஞ்சமெல்லாம்
பொய்யடா பொய்யடா பொய்.



அனைத்து உலகும் நம்மால் அநுக்கிரகம் பெற்று என் ?
அனைத்துலகும் நம் வசமாய் ஆய் என்? _ அனைத்து உலகும்
கொண்டாடில் என்னை? வினைக்கொத்து அறுத்துப் பேரின்பம்
கண்டாடில் அன்றோ கதி.

அறிவு இழந்து நின்ற சுக ஆனந்தத்து உள்ளே
குறி இழந்து நின்று குலாவிப் _ பிறியாது
இருந்தால் பிறப்பு அறுமோ?விச்சைமால் கொண்டு
திரிந்தால் பிறப்பு அறுமோ? செப்பு.

எத்திசையும் எவ்வுலகும் எத்தொழிலும் எப்பயனும்
நித்தியம் என்று எண்ணின் நிலையாதே _ புத்தியினால்
கண்ணாடியில் தோன்றி மாய்ந்து விடும் காண் இவற்றைக்
கண்ணாடியில் கனவில் காண்.

எத்தனைதான் கற்றாலும் எத்தனைதான் கேட்டாலும்
எத்தனை சாதித்தாலும் இன்புறா _ சித்தமே
மெய்யாகத் தோன்றி விடும் உலக வாழ்வு அனைத்தும்
பொய்யாகத் தோன்றாத போது.

மின் போலத்தோன்றிடும் உலக வாழ்வு அனைத்தும்
என்போலிகள் திரமென்று எண்ணுவர்_தன்போதம்
இல்லார் சிவபோகம் என்றும் அருந்தியிடு
நல்லார் திரம் இது என்னார்.

தேசம் ஊர்பேர்காணி சீர்வரிசை சாதியெனும்
ஆசையால் நெஞ்சே! அலையாதே _ நேசப்
பொருப்பானை நின்று அறிவில் போக்கு வரவுஅற்று
இருப்பானைப் பார்த்தே இரு.

ஆகம் பகை ஆவது அன்றிப் பகை உண்டோ?
மோகம் தவிர்த்த முனிவோர்க்கு இங்கு _ ஏகன்
இருவர் அறியாத ஈசன் அருள் அல்லால்
ஒருவர் துணை உண்டோ ? உரை.

அளவிலாச் செல்வத்து அடைந்தாலும் ஆகத்து
அளவிலாச் சித்திகள் உண்டாயும் _ அளவில் கலை
ஆய்ந்தாலும் என்னை? சுகர் அல்லர் சிவானந்தம்
தோய்ந்தார்கள் அன்றோ சுகர்.

ஆகாத காரியம் செய்து ஆம்சுகமும் ஆங்கதனால்
போகாத துக்கம் பொருந்துவதும் _ ஓகோ
உரைக்கில் அணுவுக்கும் உயர்ந்த மாமேரு
வரைக்கும் நிகராம் மதி.

பொஊஇல் வரும் துன்பம் புகுந்து அறிந்தும் பூரணமா
மெய்யில் வரும் இன்ப விளைவு அறிந்தும் _ ஐயோ
தெளியாதது என்ன? நலம்தீங்கு கண்டு சற்றும்
களியாதது என்ன மயக்கம்.

ஆகம் சிறைச்சாலை அக்கரணம் காவலாள்
போகம் புவனம் பொருந்தும் இடம் _ ஒகோ
இதனுள் படும் உயிர்கட்கு ஈடேற்றம் செய்வான்
அதனுக்கு இறைவன் அரன்.

அதிட்டானம் ஈசன் அருள் அன்றி மற்றை
அதிட்டானம் எல்லாம் அநித்தம் _ அதிட்டானம்
பொய் என்று அறியாமல் பூதலத்து நெஞ்சமே!
மெய் என்று உழல்வது எல்லாம் வீண்.

நின்னை மதிக்கின் நினக்கு அதிகர் செல்வம் நினை
நின்னை அறிஞன் என நீ நினையின் _ நின்னில்
சிறியார் வறுமை நினை சிந்தை புக என்றும்
குறியா இடும்பை துக்கம் கோள்.

அநித்தியத்தை நித்தியம் என்று ஆதரிக்கும் பொல்லா
மனித்தருடன் கூடி மருவார் _ தனித்திருந்து
மோனந்தமாம் சிவத்தில் மூழ்கி மலத்தை அறுத்து
ஆனந்தமாய் அழுந்துவார்.

தாகம் மறந்து சதுர் மறந்து தான் மறந்து
தேகம் மறந்து அட்டமா சித்தி மறந்து _ ஆகத்தின்
வந்தது அறியாது இருந்து மாறாச் சிவானந்தம்
சந்ததம் வாழ்வார்க்கு ஆர்சரி.

உள்ள மலம் நீங்கி ஒழியாச் சிவானந்த
வெள்ளம் துளைந்து விளையாடும் _ பிள்ளைகாள்
அத்துவிதம் ஆனீர் நம்மாகம் பிரிந்தோம் என்று
இத்துவிதம் எண்ணுவானேன்.

அறிவாய் அறிவு இழப்பில் ஆகின்ற இன்பச்
செறிவாய் சுகமாய்த் தினமும் _ பிறியாது
இருந்து அங்கு அதீதமாய் ஏய்ந்த சிவானந்தம்
பொருந்துவார் முத்தரெல்லாம் போய்.

தனை அறியார் ஈசன்தனை அறியார் பாச
வினை அறியார் ஆனந்தம் மேவார் _ தனை அறியும்
சிட்டர் தமக்கு இல்லாத தீங்கு உரைப்பர் பொல்லாத
துட்டர் தமக்கு உள்ள தொழில்.

தன்னை அறியார் தலைவன் தனை அறியார்
முன்னை வினையின் முடிவு அறியார் _ பின்னைக்
குருக்கள் என்றும் பேரிட்டுக் கொள்ளுவார்கள் ஐயோ
தெருக்கள் தனிலே சிலர்.

வாயுவெளிதான் அசையாதவாறு இருந்தால் போல் என்று
நீயதுவும் பூரணமாய் நிற்கவே_ காயத்துக்கு
உள்ளுக்குள்லேதான் சிவம் என்று உற்றுப்பார்ப்பார் ஊசிப்
பொள்ளலால் வான் பார்ப்பார் போல்.

கற்க இடர்பட்டு மிகக் கற்றஎல்லாம் கற்றவர்பால்
தற்கம் இட்டு நாய் போலச் சள்ளெனவே _ நற்கருணை
வெள்ளம் அடங்கும் விரிசடையார்க்கு ஆளாகி
உள்ளம் அடங்க அல்லவோ.

அறியார் கனவிலும் ஆனந்த ரூபம்
அறிவார் தமையும் அடையார் _அறிவார்கட்கு
இல்லாத தீங்கே எடுத்து உரைப்பார் இவ்வுலகில்
பொல்லார் தலையில் பொறி.

நீதி இல்லா மன்னர் இராச்சியமும் நெற்றியிலே
பூதி இலார் செய்தவமும் பூரணமாம் _ சோதி
கழல் அறியா ஆசானும் கற்பு இலரும் சுத்த
விழல் எனவே நீத்துவிடு.

ஐந்தறிவால் கண்டாலும் ஆர் ஏது சொன்னாலும்
எந்த விருப்பு வெறுப்பு ஏய்ந்தாலும் _ சிந்தையே!
பார விசாரத்தைப் பண்ணாதே ஏதொன்றும்
தீர விசாரித்துச் செய்.

பரபரக்க வேண்டா பலகாலும் சொன்னேன்
வரக்கண்டு ஆராய் மனமே _ ஒருவருக்கும்
தீங்கு நினையாதே செய்நன்றி குன்றாதே
ஏங்கி இளையாது இரு.

மிகுந்த குலம் செல்வத்து மேவுவதும் அத்தைப்
பகுத்துப் பொய் என்று விடும் பாங்கும் _ தொகுத்து
விரித்தால் நன்னெஞ்சே! மிகு வாரணத்தை
உரித்தான் செயல் என்று உணர்.

ஆறு ஆறு தத்துவம் வைத்து அத்தில் உறை மூர்த்திகள் வைத்து
ஏறா மலபாகம் ஏறவே _ மாறாமல்
உன்னை விடாது ஆள்வான் உனைக்கேட்டோ நெஞ்சமே
என்ன விசாரம் எமக்கு.

தானோ அசத்து அல்ல என்று அறிந்தால் தாரணியில்
ஏனோ பிதற்றிடுவது ஏழை நெஞ்சே _ தானே
தானே இறவாது தான் இறக்க அருளை
மறவாது இரு சிவம் ஆவை.

ஏற்றாது அவையாய் இருப்பதுவும் உள்மயக்கம்
ஆற்றாது தீர் என்று அறற்றுவதும் _ தோற்றாது
தோற்றுவதும் உன்னைச் சுக பூரணன் என்று
தேற்றுவதும் ஈசன் செயல்.

அன்றே அரன் அணுக்கள் பாசங்கள் ஐந்தொழில்கள்
நன்றே சிவனும் நடுவனே _ சென்று அருளில்
நிற்கச் சிலர் சிலர்கள் நீள் நரகில் பூதலத்தில்
சொற்கத்து இருப்பது என்னோ சொல்.

ஆசை அறாய் பாசம் விடாய் ஆனசிவ பூசை பண்ணாய்
நேசமுடன் ஐந்தெழுத்தை நீ நினையாய் _ சீ சீ
சினமே தவிராய் திருமுறைகள் ஓதாய்
மனமே உனக்கு என்ன வாய் ?

தில்லைவனம் காசி திருவாரூர் மாயூரம்
முல்லைவனம் கூடல் முதுகுன்றம் _ நெல்லை களர்
காஞ்சி கழுக்குன்றம் மறைக்காடு அருணை காளத்தி
வாஞ்சியமென் முத்தி வரும்.

சிவபோக சாரம் முற்றிற்று _ சிவ சிவ.


எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழாசான்
திரு. அ.பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு காணிக்கையாக
புதுவை ஞானம் தொகுத்தது.

Read More...

Sunday, November 4, 2007

Read More...

Read More...

Saturday, March 31, 2007

பாரதம்

அமரர் சத்யஜித் ரே அவர்களின் புகழ் மிகு திரைக்காவியமான 'ஜல்ஸா கர் ' (MUSIC HALL ) மாளிகை உங்களுக்கு நினவுக்கு வருகிறதா ? அப்படிப்பட்ட கம்பீரமானதொரு மாளிகை நான் பிறந்த தெருவிலேயே ' கடைசி வீடு ' என்ற பெயரால் அழைக்கப்பட்டு ஆட்சி செய்து கொண்டிருந்தது. அந்த வீட்டில் யானை ஒன்று தான் இல்லை. மற்றபடி குதிரைகள் கோச்சு வண்டி, லஸ்தர் விளக்குகள், ஒளியைப் பிரதிபலித்து அதிகப் படுத்தும் ரஸகுண்டுகள் தஞ்சாவூர் ஒவியங்கள், வேலைப்பாடு மிகுந்த மரச் சாமான்கள் ஏராளமான நகை நட்டுகள் எல்லாமும் இருந்தன. என் மனவி இறந்து போய் கால் நூற்றாண்டு கடந்து நான் அங்கு போய்ப் பார்க்கையில் இடிந்து குட்டிச் சுவராய் அந்த மாளிகை. கண் கலங்கியது. அந்த வீட்டு சாரட்டு வண்டியில் முகம் பார்த்து பல்லிளித்தது,பழித்துக்காட்டி,நாக்கைத்துருத்தி பயம் காட்டி மகிழ்ந்தது. எம்.ஜி.ஆர் வாழ்க ஜிவாஜி ஒழிக என்று கோச்சு வண்டியில் படிந்திருந்த புழுதியின் மேல் எழுதி மகிழ்ந்தது எல்லாம் நினைவுக்கு வந்தது. வீட்டுக்காரரின் சந்ததிகள் விற்றுக் காசாக்கிக் கொண்டு எங்கோ சென்று விட மிஞ்சியிருந்த ஒரு பங்காளி குடிசையில் குடியிருந்தார்.அவரிடம் பல முறை கெஞ்சிக் கூத்தாடி பெற்ற ஒரு புத்தகம்-‘ பாரதம்’. முதல் 25-ஆம் பக்கம் வரை கிழிந்து போய் விட்டது 399 பக்கம் தாண்டியும் கிழிந்து விட்டது. அந்த முதல் 25 பக்கத்தில் ‘திபருவத்தாதிபருவம்’ என்றொரு அத்தியாயம் இருந்திருகிறது. யார் எழுதியது? யார் பிரசுரித்தது ? எந்த ஆண்டு வெளி வந்தது ? ஒன்றும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் அந்த மொழி நடையும், வாக்கிய அமைப்பும், அச்சு நேர்த்தியும் வியப்பிலாழ்த்துகிறது.அந்தக் காலத்தில் அதனை வாய்விட்டு ராகம் போட்டு ஒருவர் படிக்க மொத்த கிராமமும் எப்படி வாய் பிளந்து ரசித்துக் கேட்டிருக்கும் என்பதையும் கற்பனை செய்து துயரத்தோடு, அப்பளம் போல் நொறுங்கும் இந்தப் புத்தகத்தை எவ்வாறேயுனும் காப்பாற்றியாக வேண்டுமே என்ற கவலையில் உங்களுடன் சில பக்கங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். “முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை" என்ற பழமொழியை அந்த மாளிகை நினைவூட்டுகிறது.னால் இனி இந்தப் புத்தகம் வாசகர் நெஞ்சில் வாழுமென நம்புவோமாக !
தி பர்வம் ------------------- கய்யியிலாழியெடுத்தருள் கண்ணனை மய்யுலாமழை வண்ணனைப் பாண்டவர் உய்ய வந்து தயஞ்செய்த பாநுவை வய்யமுண்ட செவ்வாயனை வாழ்த்துவாம். ------------------------------கேளுங்கள் ஓ. . . சவுனகாதி முனிவர்களே!சந்திரகுல சிகாமணியாகிய ஜெநமேஜய மகாராரஜனை வைசம்பாயனர் பார்த்து ஓ. .,. . அரசனே! இந்த ஸ்ரீமகாபாரதம் - தி பர்வம் - சபா பர்வம் - ரண்ய பர்வம் - விராட பர்வம் - உத்தியோக பர்வம் - பீஷ்மபர்வம் - துரோண பர்வம் - கர்ந பர்வம் - சல்லிய பர்வம் - சவுத்திக பர்வம் - ஸ்ரீபர்வம் - சாந்தி பர்வம்- அநுசரசநிக பர்வம் - அஸ்வமேத பர்வம் - சிரம வாச பர்வம் _ மவுசலபர்வம் _ மஹா பிரஸ்தானிக பர்வம் _சொர்க்காரோகண பர்வம் கிய பதினெட்டு பர்வமாக இருக்கும் இரி திறத்தார் சேனைகளும் 18 அக்குரோணி, ஒரு அக்குரோணிக்குத் தொகை என்னவெனில் தேர் ஒன்று, யானை ஒன்று,குதிரை மூன்று, காலாள் ஐந்து இது ஒரு பந்தி இப்படி மூன்று கொண்டது( தேர் 3,யானை 3, குதிரை 9, காலாள் 15)சேனாமுகம்.இப்படி சேனாமுகம் மூன்று கொண்டது குமுதம்,இப்படிகுமுதம் மூன்று கொண்டது கணகம், கனகம் மூன்று கொண்டது வாகினி , வாகினி மூன்று கொண்டது புலுதம், புலுதம் மூன்று கொண்டது சமுத்திரம், சமுத்திரம் மூன்று கொண்டது சமாக்கியம், சமாக்கியம் மூன்று கொண்டது அக்குரோணி.
இப்படி பாண்டவர் ஏழு அக்குரோணியும் சுயோதனன் முதலானோர் பதினெட்டு அக்குரோணியும் உடைத்தாகி இரு திறத்தாரும் போர் செய்தது பதினெட்டு நாள். இந்தப் பத்னெட்டு நாளில் பத்து நாள் வரைக்கும் காங்கேயன், ஐந்து நாள் வரைக்கும் துரோணாச்சாரி, இரண்டு நாள் வரைக்கும் கர்நன், மற்ற ஒரு நாள் உதயாதி பதினந்து நாழிகை வரைக்கும் சல்லியன்,மற்ற பதினைந்து நாழிகை வரைக்கும் சுயோதனன் சேனாதிபதிகளாயிருந்தார்கள். இவர்களைப் பாண்டவர்கள் வெற்றி பெற்று உலக முழுதையும் கைக்கொண்டு அரசு செலுத்திப் பரம பதம் போய்ச் சேர்ந்தார்கள். இது கால கதி. இந்த காலகதி விளங்க அந்த ஸ்ரீ மகாபாரதத்தை யாவருமுணர கிரந்தமாகச் செய்து வெளிப்படுத்தினவர் என் குருவாகிய வேத வியாசர் அவர் பிறப்பை முன்னங்கூறுகிறேன் .
வேத வியாசர் உற்பவ சருக்கக் கதை.
கடல் சூழ்ந்த நெடிய உலகத்தில் நீர் வளம் குடிவளம் நிலவளம் பெற்று விளங்குகின்ற நாடெவற்ரிலும் சிறப்புற்றிருக்கின்றது சோதி நாடு.அந்தச் சோதி நாட்டிலிருந்து உலக முழுதும் தன்னை வணங்கச் செங்கோல் நடாத்தி வருகிறவன் இரவி குல திலகனான வசுவென்பவன். அவ்வசு மந்திரி முதலானவர்கள் தன்னைச் சூழ்ந்து வர வெளிப்பட்டுக் காட்டுக்குச் சென்று வேடையாடி இளைப்பாற முனிவர்கள் தவஞ்செய்கிற பெரிய சோலையில் வந்தான். அச்சோலையில் தவஞ்செய்து கொண்டிருக்கிற முனிவர்களைப் பார்த்துத் தவத்துக்கு மிஞ்சின பொருள் யாதொன்றுமில்லை தலால், நாம் தவந்செய்ய வேண்டுமென்று கருதி மந்திரி முதலானவர்களை அழைத்து ஓ! மந்திரிமார்களே! இதுவரை நான் அரசு செய்து வந்தது போல் யாவர்க்கும் ஒரு குறைவும் வராமல் அரசு செலுத்துங்கள் என்று கூறி தனது முத்திரை மோதிரத்தைக் கொடுத்து விட்டான். மந்திரி முதலானவர்கள் அரசன் முகக்குறியைக் கண்டு தடுத்துப் பேசச் சக்தி இல்லாதவர்களாய் , அரசன் கட்டளைப்படி சோதி நாட்டில் வந்து யாதொரு குறைவும் வராமல் அரசு செலுத்தி வந்தார்கள்.(தொடரும்) இங்கே வசுவென்பவன் முனிவர்களிடத்திற்சென்று வணங்கி அவர்கள் கிருபையினால் தவ நிலை சேர்ந்து அநேக நாள் தவஞ்செய்திருந்தான். இப்படி அருமையான தவஞ்செய்கிற வசுராசனுக்கு முன் இந்திரன் வந்து ஓ. . வசுராஜனே ! உலகிலுள்ள எல்லா அரசர்களிலும் நீ மநு ஸாஸ்திர விதி பிசகாமல் செங்கோல் நடாத்தித் தருமதேவதையை நாலுபாதத்தில் நடக்கச் செய்து குடிகளைக் காப்பாற்றி வருகிறவன் தவ நிலை சேர்ந்து தவந்செய்கிற காரணமென்னவென்று வினவ, வசுராஜன் இந்திரனை வணங்கி ஓ. . ஐயனே ! தவத்துக்கு மிஞ்சின பொருள் வேறொன்றுமில்லையென்று நினைத்து சஞ்சலத்துக்குக்கிடமாகிய உலகத்தை நீக்கி இத்தவத்தைச் செய்யக்கருதி தவநிலை சேர்ந்தேனென்றான். இந்திரன் ஓ. . . வசுராஜனே! தவத்திற்குயர்ந்த பொருள் வேறொன்றுமில்லை அது உண்மைதான்.அந்தத் தவம் அரசனால் பெறுக வேண்டும். அப்போது தவத்துக்கு மிகவும் உயர்ந்தது அரசு.அவ்வரசை மநுநெறி வழுவாமல் நடாத்தி வந்தால் அதைவிட மேலான பயன் என்னயிருக்கிறது? தலால் உனக்கு என்ன வேண்டும் அவ்வரத்தைக் கொடுக்கிறேன்.அதைப்பெற்று முன் போலவே அரசு செலுத்தி வாவென்று வழங்க வசுராஜன் ஓ! ஐயனே எந்த்ந்த லோகங்களைக் காண விரும்புகிறோனோ அந்தந்த லோகங்களைக்காண விரும்புகிறேன் என்று சொல்ல, இந்திரன் அக்கருத்தின்படி, ஒரு திவ்ய விமானங்கொடுத்து சத்துருவை நாசஞ்செய்ய ஒரு கால தண்டமும் கமல மாலையும் சொர்ண நிறமும் பாலித்து இந்திரன் தனதிருப்பிடம் சென்றான்.வசுராஜன் அவ்வரத்தைப் பெற்றுக்கொண்டு தவ நிலை விட்டுத் தன்னாட்டிற்சென்று காவிகாம்பர சடாடவி தண்டு கமலங்களை நீக்கி கங்கை முதலாகிய தீர்த்தங்களில் ஸ்நானஞ்செய்து நல்ல வஸ்திரங்களையுடுத்தி மகர குண்டல ரகேயூர கடக கங்கண முதலான பரணங்களை அணிந்து மல்லிகை முல்லை முதலாகிய பரிமளமிகுந்த நறுமலர் மாலைகள் சூடி சந்தனம் புநுகு கஸ்தூரி கற்பூர சவ்வாது பூசி நவரத்தினமிட்டிழைத்த சிங்காதனத்தில் இனிது வீற்றிருந்து தேசத்தரசர்களெல்லாம் வணங்க வேத வேதியர்கள் பல சிகள் கூற மகுடாபிஷேகனாகி மநுஸாஸ்திர விதி பிசகாமல் முன் போலவே அரசு செலுத்தித் தனக்கு நாலு வரங்கொடுத்த இந்திரனுக்கு மகிழ்வுண்டாக அவனுக்குத் திருவிழா நடத்தி வந்தான்.அதனாலே நீர்வளமிகுதியாகி குடிவளமிகுந்தது. இச்செய்கையை மற்ற அரசர்கள் கண்டும் கேட்டும் அவரவர்கள் தனித்தனியே இந்திரனுக்குத் திருவிழா நடத்தினார்கள். அதனாலே இந்திரனுக்கு அதிக மகிழ்ச்சியுண்டாகி எல்லா வளமும் பெருகும்படி நீர் வளத்தைப் பெருகச் செய்தான்.இப்படி உலக முழுதுஞ் சுகமடைந்தது.இந்த வசு ராஜன் இந்திரன் கொடுத்த விமானத்தின் மீதேறித் தன் கருத்தில் நினைத்த லோகங்களுக்கெல்லாம் சென்று அவிடத்திலுள்ள அதிசயங்களைப் பார்வையிட்டுக்கொண்டு அர்சு செலுத்தி வருகிற நாளில் ஒரு நாள் மந்திரி முதலானவர்கள் புடை சூழ வேடிக்கையார்த்தமாய் வெளிப்பட்டுத் தன்னகரத்தின் மரும்க்கில் இருக்கிற குளிர்ச்சியையுடைய சுத்தமதியென்னும் பெயர் பெற்ற நதியருகில் வந்து அவ்விடத்திலுள்ள விநோதங்களைப் பார்த்து வருகிறபோது, தனது பராக்கிரமத்தை மந்திரிகளுக்கும் மற்றவர்களுக்கு மறிவிக்க வேண்டி அங்கே உயர்ந்து பருத்திருந்த கோலாகலமென்கிற வெற்பைத் தன் காலினால் எற்றி, அந்நதியில் தள்ளித் தன் நகரத்தில் சென்றான். பின்பு சுத்தமதியென்கிற நதிபோகத்தையனுபவிக்கக் கருதி ஒரு பெண் ரூபந்தரித்துக் கோலாகலமென்னும் வெற்பைக் கணவனாகக் கொண்டு கூடி வசுபதத்தனென்றொரு புத்திரனையும் கிரிகை என்றொரு புத்திரியையும் பெற்றாள். அந்த இரண்டு இரண்டு மக்களையும் அன்புடன் வளர்த்து வருகிற நாளில் கிரிகை என்பவள் பேதைப்பருவம் பெதும்பைப் பருவங்கடந்து மங்கைப்பருவமான காலத்தில் ஒருநாள் தன்னந்தனியே அந்நதியருகில் விளையாடிக் கொண்டிருந்தாள்.அந்தத் தருணத்தில் முன் போல வசுராஜன் வேடிக்கையார்த்தமாய் அந்நதியருகில் வந்து விநோதங்களைப் பார்த்து வருகிறபோது நதியருகில் விளையாடித் திரிகிற கிரிகை என்பவளைக் கண்டு இந்தக் கன்னிகை யார் ? மஹா ரூப வதியாய் இரதியைப்போல் பிரகாசிக்கிறாள், இஅள் வதநமோ சந்திர பிம்பம் , குழலோ முகில் , நெற்றியோ மூன்றாம் பிறை, புருவமோ கருப்பு வில், கண்ணோ கருவிளமலர்,நாசியோ குமிழம்பூ,கன்னமோ கண்ணாடி, வாயோ சேதாம்பல், பல்லோ முல்லை, கழுத்தோ கமுகு, முலையோ மலை,தோளோ வேணு, முன் கையோ மகர யாழ், அகங்கையோ தாமரை, இடையோ அந்தரம், அல்குலோ அரவப்படம்,தொடையோ வாழைத்தம்பம், முழந்தாளோ ஞண்டு,கணைக்காலோ வரால், பாதமோ புத்தகம்,இவளுக்கொப்ப இவளேயன்றி வேறொருவரில்லையென்று அதிக மையலாகிப் பிரேமை கொண்டு அந்தக் கிரிகை விளையாடுகிறதைப் பார்த்து சித்திரப் பிரதிமை போல் நிற்கிறதை மந்திரிகள் அறிந்து _ ஓ! ஓ! நமதரசன் அக்கன்னிகையின் மேல் மையலாகினானென்று குறிப்பினாலுணர்ந்து அக்கன்னிகையிடத்தி சென்று ஓ _ அம்மணி ! நீ யார் ? உன் பெயரென்னவென்று வினவ கிரிகை ஓ புண்ணியவான்களே, நான் இந்த நதியின் புத்திரி என் பெயர் கிரிகையென்று கிளற்றி அந்நதியிலிறங்கி விட்டாள். மந்திரிகள் அரசனிடத்தில் வந்து ஓ_அரசனே! அப்பெண் இந்த நதியின் புத்திரியாம் . அந்த அம்மனுக்கு கிரிகை என்னும் பெயராம் என்று கூறினார்கள். அரசன் கேட்டு அந்நதியருகிற் சென்று சொல்லுகின்றான் : உலகுக்குத் தாயாகி எவர்களையும் பாது காக்கின்ற தேவதா சுரூபி ! அடியேன் மனங்களிக்க நின்னிடமாயிருக்கிற கிரிகை என்னும் கன்னிகையை மணம் செய்து கொடுக்க வேண்டும் அம்மணியென்று பிரார்த்தித்தான். அந்தச் சுத்தமதியென்னும் நதி ஒரு பெண் உருவந்தரித்து இரண்டு மக்களுடன் அரசன் முன்றோன்றி இரண்டு மக்கள் வந்த விருத்தாந்தத்தையும் சொல்லி _ ஓ அரசனே! நீ மஹா புண்ணியவான் லோகாதிபன் தலால் உன் ஸ்துதிக்கு மகிழ்ந்து இந்த இரண்டு மக்களையும் உனக்குக் கொடுத்தேன். கன்னிகைய்யகிய கிரிகையை நீ மணம் புரிந்து இந்தப் புத்திரனைச் சேனாதிபதியாய் வைத்துக்கொள்ளென்று கட்டளையிட்டு முன் போல் நதி உருவமாணாள். அரசன் கிரிகையென்னுங்கன்னிகையை ஐம்பத்தாறு தேசத்தரசர்களும் அறிய மங்கலம் புணைந்து வசுபதத்தனுக்கு சேனாதிபத்தியங்கொடுத்துப் பின்பு கிரியையோடு பள்ளியரை சேர்ந்து பஞ்சணை மஞ்சத்திலிருந்து தாம்பூலந்தரித்து 5 வித லிங்கனமும்,11 வித அதர பாணமும், 7 வித நகக்குறியும்,7 விதத் தொழிலும், 8 வித தந்தக்குறியும் புரிந்து, அமுதமிருக்கும் 15 தாநத்தையுமுணர்ந்து, 8 வித தாடனமும்,8 வித புட்குரலுமுண்டாக, 118 விதக் கரணங்கலைப் புரிந்து, கலவிப் போரிலுண்டாகும் 16 வித நயமுமியற்றி, கமும் மாவியுமொன்றெனக் கட்டி முத்தமிட்டு வட்டமிட்ட செப்புத் தனத்தை கைத்தலத்திற் பற்றிப்பிடித்து குழைத்துக் களித்து இரதியு மதனெனக்கூடிக் கலந்து பருவ கிரிகை மகிழ்ச்சியுறச் சிறந்த லீலை புரிந்து வைபோக சையோகசம்போகமடைந்து வாழ்ந்து வருகிற நாளில் கிரியையென்பவள் கர்ப்பவதியானாள். அரசன் கர்ப்பங்கொண்ட தன் மனைவிக்கு நல்ல மாம்சங்களைக் கொண்டு வந்து கொடுக்கக் கருதி மந்திரிமார்கள் _ இரத கஜ துரக பதாதி வேடர்கள் _ நாய்கள் வலையர் முதலானவர் புடை சூழ வெளிப்பட்டுக் காட்டிற்சென்று யானை கரடி சிங்கமுதலான பெரிய மிருகங்களை அதஞ்செய்து நல்ல ருசியுள்ள மிருகங்களை வதைத்து அதன் மாமிசத்தை எடுத்து அரண்மனைக்கு அனுப்புவித்துச் சேனைகளோடு மஹா விநோதமுள்ள ஒரு சோலையில் வந்திறங்கி அவ்விடத்தில் பெரிய மாளிகையைப் போல் வஸ்திரங்களாலியற்ரி அக்கூடார மாளிகையில் சப்பர கூட மஞ்சமிட்டு அன்றிரவில் சயனித்திருந்தான். அப்போது சந்திரோதயமாயிற்று . இளந்தென்றல் வீசிற்று..புஷ்பங்களெல்லாம் பரிமளித்தது. அது கண்டு அரசன் மிகுந்த காமங்கொண்டு கிரிகையினது உருவத்தை மனத்தில் நினைத்து தனந்தனியே புரண்டு அயர்ந்து நித்திரை செய்தான். அப்படி நித்திரை செய்கிறபோது கிரிகை வந்து தன்னைக் கூடிக் கலந்தது போல் கனவு கண்டு வீரியம் கலிதமாயிற்று. உட்னே அரசன் விஷித்து ஓ! ஓ ! மோசம் வந்தது. நாம் காம வெறி கொண்டு நித்திரை செய்ததனால் வீரியம் வெளிப்பட்டது. இது வீணாகப்போனால் மகா குற்றம் நேரிடும். இதற்கென்ன செய்கிறதென்று சற்று நேரம் லோசித்து தன்னெதிரில் வைத்திருக்கிற வல்லூறு என்கிற பட்சியை சைகை செய்தஷைத்து _ ஓ! பட்சியரசே!இந்த வீரியத்தைக் கொண்டு போய் என் மனவிக்குக் கொடுவென்று கட்டளையிட்டு ஒரு இலையைப் பறித்து வட்டில் போல் தைத்து அவ்வீரியத்தை அதிற்புகட்டி அந்த வல்லூறுவினிடத்திற் கொடுத்து அனுப்பினான். அந்த வல்லூறு அவ்வட்டிலை மூக்கினாலேற்றுக்கொண்டு கிரிகையினிடத்து வரக்கருதி யமுனையாறு வரைக்கும் வந்தது. அந்கு ஒரு ல மரத்தில் பசியினால் கனவருத்தமடைந்திருந்து ஒரு இராஜாளி இருந்தது. இந்த வல்லூறு செல்கிற அரவந்தெரிந்து பறந்து வந்து பார்த்து இது இரையெடுத்துப் போகிறது அதைப் பறித்துப் புசிக்கலாமென்று கருதி வல்லூறைத் தடுத்தது. இந்த வல்லூறு இராஜாளியை நோக்கி நீயேன் என்னை மறிக்கிறாய் நான் அரசன் அலுவலாகச் செல்கிறேன்.வீணாய் வருத்தத்துக்கிடம் வைத்துக் கொள்ளாதே வழிவிடென்று கூற, சீ _ சீ நானென்ன உன்னை விடுவனா? உன் மூகிலிருக்கிற இரையை நான் புசிக்கமல் போகிறதில்லையென்று பறந்து வந்தடித்தது. வல்லூறு அது கண்டு அடடா _ நீ எனக்கொரு அணுமாத்திரமென்று இகழந்து இதுவும் எழும்பிப் பறந்து அந்த இராஜாளியை அடித்தது. இப்படி இரண்டு பட்சிகளும் போராடுகிறபோது இராஜாளியினது மூக்கு அந்த வீரியமிருக்கிற வட்டிலிற்பட்டு இலை கிழியவே வீரியம் யமுனையாற்றில் இர்ண்டு துளியாய் விழுந்தது. உடனே வல்லூறு இராஜாளியை விட்டு விட்டு அரசனிடத்து வந்து நடந்த விருத்தாந்தத்தைக் கூறிற்று. அரசன் கேட்டு கன வருத்தமடைந்து அன்றிராத்திரி அங்கிருந்து மறுநாள் காலமே தன்னகரம் வந்து சேர்ந்து மனைவியைக் கண்டு மகிழ்ந்து முன் போல் அரசு செலுத்தியிருந்தான்.
இங்கே யமுனையாற்றில் விழுந்த வீரியத்தை அப்சரஸ்த்ரீகளிலொருத்தி பிரமன் சாபத்தினாலே மச்சமாகி சஞ்சரித்திருந்தாள். அவள் இரண்டு பிரிவாக வீழ்ந்த அவ்வீரியத்தைப் புசித்தாள். அன்று முதல் அவள் கர்ப்பவதியாகிப் பிரசவம்காலம் சமீபித்திருக்கிற தருணத்தில் மீன் பிடிக்கிற வலையர் வந்து அந்த யமுனையாற்றில் வலையை வீசினார்கள். அவ்வலையி மீனமாயிருக்கிற அப்சரஸ்த்ரீ அகப்பட்டாள். வலையர் பார்த்து இந்த மீன் மிகவும் பெரிதாயிருக்கிறதுமன்றி இதன் வயரும் பெருத்திருக்கின்றது இதை நமது அரசனிடம் சேர்ப்பிக்க வேண்டுமென்று கருதி அந்தத்தாச ராஜனிடத்தில் சேர்த்து விட்டார்கள். தாசராஜன் அந்த மீனத்தின் வயிற்றைப் பக்குவமாகக் கிழித்துப் பார்த்தான். அதிலொரு புத்திரனும் புத்திரியுமிருந்தார்கள்.புத்திரர்களில்லையென்று கன வருத்தமடைந்திருந்த தாசராஜன் கண்டு பரமானந்தத்தை யடைந்தவனாய் விழித்த கண் விழித்தபடி பார்த்திருக்கிற தருணத்தில் மீனமாயிருந்த அப்சரஸ்த்ரீ அந்தரத்தில் ஒரு திவ்ய விமானத்தில் தோன்றி ஓ தாசராஜனே! என்று அழைத்து அதோ உன்னருகிலிருக்கிற மீன் வடிவு நான் தான் அப்புத்திரர்களோ உலகமுழுதும் அரசு செலுத்தும் வசுராஜன் வீரியத்தால் வந்தவர்களென்று அந்த விருத்தாந்தத்தைச் சொல்லிப் பின்னும் தாசராஜனைப் பார்த்து ஓ தாச ராஜனே! என் வரலாற்றைக் கூறுகிறேன் கேள்.அந்தர வாசிகளாகிய அப்சர ஸ்த்ரீகளில் நானுமொருத்தி. பிரமனிடத்தில் பூசைக்குரிய பணிவிடைப் பெண்ணாயிருந்தேன். ஒரு நாள் பூசைக்குச் சலந்திரட்ட அமுனையாற்ருக்கு வந்து அந்த ற்றிலிருக்கி8ற மீன்களின் விநோதங்களைப் பார்த்திருந்து பூசை வேளை தப்பின பின்பு பிரமனிடத்திற் சென்றேன்.பிரமன் என்னைப் பார்த்து ஓ பெண்ணே இந்நேரவரையில் என்ன செய்தாயென்று கேட்டதின் பேரில் உண்மையைக் கூறினேன்.அதன் மேல் சினங்கொண்டு மீன் விநோதங்களைப் பார்த்திருந்தமையால் அவ்வாற்றிலேயே மீனமாகி இருவென்று சாபமிட்டார். அதன் மேல் மிகுந்த துன்பமடை பிரமனை மிகவும் வேண்டிக்கொண்டேன்.பிரமன் மகிழ்ந்து வசுராஜன் வீரியம் யமுனையாற்றில் விழப்போகிறது . அதை நீ புசிப்பாய் வலையர்கள் பிடித்து தாசராஜனுக்குக் கொடுப்பார்கள்.தாசராஜன் உன் வயற்றைக் கிழிப்பான் அப்போது நீ பெற்ற சாபம் தீருமென்று கூறினார். அப்படியே இன்றைய தினம் அச்சாபம் தீர்ந்த்தென்று கூறி முன்போல் பிரமனிடத்திற் சென்றாள்.
அதைக்கேட்ட தாசராஜன் திடுக்கிட்டு இம்மக்கள் நமதரசனாகிய வசுராஜன் புத்திரர்கள். இனி நாம் வைத்திருக்கிறது தகுதியல்ல. அரசனிடத்திற் சேர்த்து அரசனிட்ட கட்டளைப்படி நடப்பது உத்தமமென்று கருதி அம்மக்களைப் பொற்றட்டிலேந்தி அரசனிடத்துக் கொண்டு வந்து வைத்து அப்ரசஸ்த்ரீ கூறியவற்றைத் தெரிவித்து நின்றான். அரசன் மகிழ்ந்து புத்திரனை எடுத்துக்கொண்டு அந்தப் புத்திரனுக்கு மச்சராஜன் என்று பெயரிட்டு வளர்த்து தன் சேனைக்குத் தலவனாய் வைத்துக்கொண்டு புத்திரியைத் தாசராஜனுக்குக் கொடுத்து அனுப்பினான்.தாச ராஜன் மிகுந்த களிப்புடன் அந்தப் புத்திரிக்கு மச்சகந்தி என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அந்த மச்சகந்தி பேதைப்பருவங்கடந்து பெதும்பைப் பருவத்தை அடந்து தந்தையாகிய தாசராஜனிடத்திற்சென்று வணங்கி _ ஐயா_எனக்கு ஒரு ப்டவு கொடுத்தால் நமது குலக்கலாச்சாரப்படி யமுனையாற்ரிலிருந்து வருகிற பெரியோர்களுக்கு படவு விட்டுக்கொண்டிருக்கிறேனென,தாசராஜன் அவ்வாறே சிறிய படவுவொன்று செய்து கொடுத்தான்.மச்சகந்தி அப்படவை சில பேரால் எடுத்து யமுனையில் விடுத்து வருகிற பெரியோர்களுக்கும் மற்றவர்களுக்கும் படவு விட்டிருந்தாள்.இப்படி சில காலஞ்சென்ற பின்பு ஒரு நாளில் பிரமன் மைந்தன் வசிஷ்டன் ,வசிஷ்டன் மைந்தன் சத்தி சத்தி மைந்தன் பராசர் அந்த பராச மஹாமுனி தனாலே உலகத்துக்கு நன்மையுண்டாக வேண்டுமென்றும் அதற்கு ஒரு புத்திரனைப் பெற வேண்டுமென்று கருதி இருபதேழு நட்சத்திரங்களில் ஒரு நட்சத்த்ரம் உச்சமாகிறது அந்த நட்சத்திரம் உச்சமாகிற காலத்தில் ஒரு ஸ்த்ரீயைக் கூட வேண்டுமென்று யோசித்து அந்தக்காலம் வரும் வரை தவத்திலிருந்தார். அந்தக் காலம் சமீபித்தது அது கண்டு தவநிலை விட்டெழுந்து நகரங்களுக்குச் செல்ல அதி வேகமாய் வந்தார்.குறுக்கே யமுனையைக் கண்டார். அந்த யமுனையோ மிகவும் பெருக்கெடுத்திருந்தது. பராசர் அதையறிந்து அந்த ற்றங்கரையில் படவோட்டியிருக்கும் மச்சகந்தியருகில் வந்து ஓ பெண்ணே நானொரு கோரிக்கையை உட்கொண்டு நகரங்களுக்கு போக வந்தேன். வழியில் இந்த று தோன்றிற்று. இதைக்கடந்து போவோமென்றால் பெருக்கெடுத்திருக்கின்றது. தயௌ செய்து படவு விடுவையாகில் ற்றைக்கடந்து என் கோரிக்கையை முடித்துக் கொள்வேனென மச்ச கந்தி ஓ ஐயா பெரியவரே றோ பெருக்கெடுத்திருக்கின்றது. உம்மை மாத்திரம் படவிலேற்றிச் செல்வேனாகில் படவுக்குத் தகுந்த பாரமல்ல.ஒரு வேளை படவு கவிழ்ந்தால் மோசம் வரும்.சற்று நேரம் இருந்தால் யாராவது இன்னுஞ்சிலபேர்கள் வருவார்கள். அப்போது தடையின்றி உம்மை அக்கரையில் சேர்க்கிறேனென ,பராசர் மச்சகந்தியைப் பார்த்து ஓ பெண்ணே படவுக்குத் தகுந்த பாரம் எவ்வளவோ அவ்வளவுக்கு நான் பாரமாயிருப்பேன் நீ சந்தேகப்படாமல் படவை விடுவென்று கூற,மச்சகந்தி இவர் யாரோ மஹாத்மாவென்று நினைத்து ஓ ஐயா வாரும் படவிலேறும் என்றாள்,பராசர் மகிழ்வடைந்து தமது தவ மகிமையால் படவுக்குத் தகுந்த பாரமிருக்க நினத்துப் படவிலேறினார். மச்சகந்தி படவையாற்றில் செலுத்தி வருகிறபோது படவு கனத்திருக்கிறது தெரிந்து இவர் மஹா தவசி என்று மனதில் நினைத்து மிகுந்த சாக்கீரதையுடன் படவைத் தள்லி வருகிறாள். படவிலிருந்த பராசர் காயத்தை நோக்கினார். அப்போது இவர் நாடிய நட்சத்திரம் உச்சத்தில் வருகிற தருணமாயிருந்தது. அதைப் பார்த்து கன வருத்தமடைந்து ஓ _ஓ _ நாம் கோரிய காலமாகிற தருணமாயிற்றே இனி என்ன செய்யப் போகிறோமென்று வருத்தப்பட்டு இனி இந்தப் படவைத் தள்ளும் பெண்ணிடத்தாவது காலந்தப்பாமல் கூட வேண்டுமென்று நினைத்து மச்சகந்தியைப் பார்த்து ஓ பெண்கள் நாயகமே இவ்வளவு வருத்தப்பட்டு வந்தும் நான் உட்கொண்ட கோரிக்கை நிறைவேற்றுவதற்கு காலந்தப்பிப் போகின்றது. நான் உட்கொண்ட கோரிக்கை என்னவென்றால் இதோ வானத்தில் இருக்கிற நட்சத்திரம் உச்சியில் வருகிறபோது ஒரு ஸ்த்ரீயைச் சேர்ந்து அவளால் ஒரு புத்திரனைப் பெறக்கருதி வந்தேன். நட்சத்திரமோ இன்னுஞ்சற்று நேரத்துக்குள் உச்சிக்கு வரப் போகின்றது. நானோ ற்றிலிருக்கிறேன். தலால் கிருபை கூர்ந்து பரந்து வளர்ந்து வருகிற உன் குயம் என் மார்பிலழுந்த அணைவாயாகில் என் கோரிக்கை நிறைவேறுவதுமன்றி இவ்வுலகத்தில் நீயும் அழிவில்லாத புகழையும் பெறுவாயென்று இனிய வார்த்தைகள் கூற, மச்சகந்தி நாணமுற்று ! பெரியவராயிருக்கிற இவ்ர் நம்மைப் புணர அழைகிறார் மனதில் நினைத்து ஓ ஐயனே! நீர் மஹா தவசி . நானோ இன்னும் மங்கைப் பருவமடையாதவள். என்னைப் பார்த்து உம்மைக் கூடென்று சொல்வது தகுதியா ? அரும்பைக் கசக்கி முகர்ந்தால் பரிமளிக்குமா ? அதுபோல் பருவ காலமல்லாத என்னைக் கூட வேண்டுமென்று கருதினது தகுதியா ? அப்படியல்லவென்று புணரயத்தனித்தாலும் என் உடல் முழுதும் மச்ச கந்தம் .நீர் தான் எப்படி சுகிப்பீர் ? மேலும் நான் கன்னிகை. டூதை யோசிக்காமல் இவ்வாறு கூறுகிறது தருமமா ? .என்னுடலோ புலால் நாற்றம் நாறுதென பராசர் மச்சகந்தியைப் பார்த்து ஓ பெண்ணே உன்னுடலில் இருக்கும் மச்சகந்தம் நீங்கி இன்று முதல் பரிமள கந்தியென்று உனக்குப் பெயராகக் கடவது.நீ என்னைக் கூடுமுன் போல கன்னிகையாகவே இருப்பாயென மச்சகந்தி இவ்வசனத்தைக்கேட்டவுடன் உடல் முழுதும் பரிமளம் வீசுகிறதைப் பார்த்துஓ _ ஓ இவர் தவ சிரேஷ்டர் மறுக்கக் கூடாது என்உ கருதி கூறுகிறாள் ஓ ஸ்வாமி தங்கள் கருத்துக்கிசைந்தபடி நானும் சம்மதித்தேன். னால் நான் மங்கைப் பருவமல்ல மேலும் தாங்கள் நினைத்த நினைப்புக்குத் தகுதியான காலமுமிடமுமல்லவே பகற்காலமாகவும் திவ்ய நதியாயியு மிருக்கிறதே இதற்கென்னெ செய்கிறதென்று கூற, பராசர் மச்சகந்திக்கு மஙைப் பருவத்தை அநுக்கிரகஞ்செய்து ற்றின் மத்தியில் ஒரு திட்டு தோன்றும்படி செய்து திருநீற்றில் கொஞ்சமெடுத்து காயத்தில் ஊதினார். உடனே யிரங்கதிர்களோடு பிரகாசிக்கிற சூரியனை மறைக்க மூடுபனி சூழ்ந்தது.அப்பனியினால் இரவு போலாயிற்று. அப்போது பராசர் மச்சகந்தியைப் பார்த்து _ ஓ பெண்கள் நாயகமே ! உன் கருத்தின்படி தகுந்த காலத்தையும் சேகரித்தேன். இனி தடையின்றி என்னைக்கூடு என்று வேண்ட, மச்சகந்தி அதிமகிழ்ச்சியை அடைந்து கருத்தொத்து அந்த ற்றின் மத்தியில் தோன்றிய திட்டில் இறங்கி இருவருங்கூடிக் கலந்தார்கள். அப்போது பராசருக்கு வீரியங்கலிதமாயிற்று, உடனே பராசர் எழுந்து யாதொன்றும் பேசாமல் ற்றைக் கடந்து நடந்தார்.மச்சகந்தி உடனே கர்ப்பவதியாகி மூன்றேமுக்கால் நாழிகைக்குள் பரப்பிரம்ம வஸ்துவாகியும் எனக்குக் குருவாகியும் விளங்குகின்ற வேத வியாசர் உதயமானார்.
விருத்தம்
முரணிறைந்த மெய்க்கேள்வியோனருளினான் முஞ்சியும் புரிநூலு மிரணியஞ் செழுங்கொழுந்து விட்டனவென் வேணியுந்தானுந் தரணியெங்கனும் வியாதனென்றுரை கெழுதபோதன முனியப்போ தரணியின் புறத்தனலென வென்வயினவதரித்தன னன்றே.
___________________________________________
புதுவை ஞானம்j.p.pandit@gmail.comgnanaththaru blogspot.com

Read More...

Friday, March 16, 2007

அழுதாலும் பிள்ளை அவள் தான் பெற வேண்டும்

Read More...

தமிழ் அளவைகள் - 1

Read More...